கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - விசாரணை நவ.26.க்கு ஒத்திவைப்பு!

0 1801

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மர்ம மரண வழக்கில் கைதான அவரது நண்பர் ரமேஷை 5 காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் கனகராஜின் தம்பி தனபாலையும் அவரது நண்பர் ரமேஷையும் போலீசார் கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர். தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று அனுமதியளித்த உதகை நீதிமன்றம், ரமேஷையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே மீண்டும் விசாரணைக்கு வந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments