வளைவில் முந்த முயன்ற லாரி, எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்து

0 2185

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் வளைவு ஒன்றில் முன்னால் சென்ற சரக்கு லாரியை முந்த முயன்ற மற்றொரு சரக்கு லாரி, எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

22ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், அதனை மற்றொரு சரக்கு லாரி முந்த முயன்றது. அப்போது எதிர்பாராத வகையில் எதிர் திசையில் அரசுப் பேருந்து வந்த நிலையில், அதன் பக்கவாட்டுப் பகுதியில் லாரி மோதியுள்ளது.

பயணிகள் அமராத இருக்கைகள் இருந்த பகுதியில் லாரி மோதியதால் பேருந்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரியின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments