வாடகை செலுத்தாத வியாபாரிகள், சீல் வைத்த நகராட்சி... 40 லட்சம் ரூபாய் ஒரே நாளில் வசூல்

0 1824

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் சீல் வைத்தார்.

பேருந்து நிலையம்,மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல கடைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை கட்டாமல் இருந்து வருவதால் நகராட்சிக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்திய நகராட்சி ஆணையாளர் வினோத், வாடகை பாக்கி வைத்துள்ள சுமார் 55 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அவரது அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் 40 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி தொகை வசூல் செய்யப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments