வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

0 5855

வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் முறையாக இல்லை எனக் கூறி, தொடரப்பட்ட வழக்கில், மேல் நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரப்படுத்துதல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய - மாநில அரசுகள் தரப்பிலும், சென்சார் போர்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, பாதிப்புகாக இந்தியா ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய் செலவிடுவதாக சுட்டிக்காட்டி, நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments