நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

0 2966

நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு இருந்ததாகவும், அது வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாகவும் காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து நேற்று ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு பரிசோதனை நடத்திய பின்னர், அவருக்கு ரத்தக் குழாயில் பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிட்ட மருத்துவமனை, சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments