பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்!

0 6083

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 46. இன்று காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த புனித் ராஜ்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐ.சி.யு.வில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமாக இருந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருடைய அண்ணன் சிவராஜ்குமாரும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments