கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.!

0 1744

அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அம்மாநிலத்தில் சில பகுதிகள் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்டயம் மாவட்டம் எருமேலி அருகே உள்ள பள்ளிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கெனவே நிவாரண முகாம்களுக்கு சென்றதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments