ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பாதையில் நேருக்கு நேர் மோதிகொண்ட அரசுப் பேருந்துகள், 25 பேர் காயம்

0 2148

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கணவாய் மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோவில் அருகே “எஸ்” வடிவிலான வளைவு ஒன்று உள்ளது. காலை தேனியில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஒரு அரசுப் பேருந்தும் மதுரைலிருந்து தேனி நோக்கி ஒரு அரசுப் பேருந்தும் எதிரெதிர் திசையில் சென்றுள்ளன.

அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேருந்துகளும் இந்த எஸ் வளைவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பேருந்துகளின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் எச்சரிக்கைப் பலகையோ அல்லது இரு பக்கமும் வரும் வாகனங்களை பிரதிபலிக்கும் குவி ஆடிகளோ பொருத்தாததே விபத்துக்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments