முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - தமிழக அரசு

0 1553

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகத் தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைப்படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்த மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப்பொழிவு ஆகியவற்றைத் தமிழ்நாடு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி நீர்மட்டத்தைப் பராமரிக்க வைகை அணைக்குத் தொடர்ந்து நீரைக் குகைப்பாதை வழியாகக் கடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை எடுத்த முடிவின்படி, கேரள அதிகாரிகளுக்கு உரிய முன்னெச்சரிக்கை அளித்தபின், இன்று காலை ஏழரை மணிக்கு அணையின் இரு வழிந்தோடி மதகுகளைத் திறந்து நொடிக்கு 500 கன அடி வீதம் நீரை வெளியேற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்குப் புறம்பாக வரும் எந்தத் தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments