இந்தியக் கடற்படைக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துசில் கப்பல், இந்திய தூதரக அதிகாரிகள் முன் ஒப்படைப்பு

0 3463

ரஷ்யாவின் கலினின்கிராடு கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்ட துசில் வகை கப்பல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

இந்தியக் கடற்படைக்காக ஏவுகணைத் தளம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதி ஆகியவற்றுடன் உணர்திறன் கருவிகள் பல்வேறு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட துசில் வகையைச் சேர்ந்த பத்துக் கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கெனவே 6 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏழாவது கப்பல் ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யாந்தர் கப்பல்கட்டும் தளத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா - ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் நெடுங்கால ஒத்துழைப்பின் அடையாளமாக இந்தக் கப்பல் விளங்குவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments