பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... மருத்துவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

0 2152

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு பெண் மருத்துவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அரசு பெண் மருத்துவர் இந்திராணி தனது கணவர் தேவனாதனுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக  கோவையில் உள்ள தனியார் கிட்னி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

காடப்பநல்லூர் பிரிவில் வந்த போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி, இடது பக்கம் சென்றுகொண்டிருந்த காரின் மீது மோதியது. இதில் இந்திராணி அவரது கணவர் தேவநாதன் மற்றும் உடன் வந்த உறவினர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவான நிலையில், பவானி போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த விபத்தால் பவானி - மேட்டூர் சாலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments