ஜாமீன் பெற்ற ஆர்யன் கான் இன்று இரவு சிறையில் இருந்து விடுவிப்பு எனத் தகவல்

0 1998

போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ஆர்யன் கான் இன்று இரவு சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்யனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி நிதின் சாம்ப்ரே, ஜாமீன் வழங்கப்பட்டதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய விரிவான உத்தரவை இன்று பிற்பகலில் பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு, உத்தரவு நகல் ஆர்தர் சாலை சிறைக்கு அனுப்பப்படும்.

இந்த நடைமுறைகள் முடிய மாலை வரை ஆகலாம் என்பதால் இன்று இரவுக்கு மேல் ஆர்யன் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதனிடையே, ஆர்யன் கான் ஜாமீன் பெற்றது தொடர்பாக, ஷாருக் கானை தொடர்பு கொண்டு நடிகர்கள் சல்மான் கான், அக்சய் குமார், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் வாழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments