திருச்சி விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

0 1624

திருச்சி விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட 76 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 கிராம் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன், அரியலூரை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் ஆகியோர் 1579 கிராம் தங்கத்தை பேஸ்டாக மாற்றி அதனை தங்களது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

 இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments