பாலியல் தொல்லை வழக்கில், சஸ்பென்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

0 2124

பாலியல் தொல்லை வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, வரும் 1ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகாத நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட எஸ்பி மட்டுமே ஆஜரானார். முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக, அவரது தரப்பில் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments