16ஆவது ஜி20 மாநாட்டில் நாளை கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி

0 2053

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை வெள்ளிக்கிழமை இத்தாலி செல்கிறார்.

அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் ரோம் மற்றும் வாடிகனில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் அழைப்பை ஏற்று ரோம் செல்வதாகவும், அங்கு கூறியுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் உலக பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது, நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பை ஏற்று நவம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் கிளாஸ்கோ செல்ல இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments