கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்திவைத்த லவ்வர் பாய்க்கு தர்ம அடி..!

0 4551
கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்திவைத்த லவ்வர் பாய்க்கு தர்ம அடி..!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டிற்குள்,  நள்ளிரவில் புகுந்த கல்லூரி மாணவர் ஒருவர், காதலிக்க கட்டாயப்படுத்தி மாணவியின் கழுத்தில் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ருக்கிசிங்கிடம் அவருடன் படிக்கின்ற உறவுக்கார இளைஞர் பிரேம் சிங் காதலை தெரிவித்துள்ளார்.

தான் படிப்பதற்காக கல்லூரிக்கு வந்திருப்பதாக கூறி அவரது காதலை ருக்கி சிங் நிராகரித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி ருக்கி சிங் தன்னுடைய வீட்டில் உள்ள படுக்கை அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு பிரேம் சிங் திடீரென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.

ருக்கிசிங் படுக்கை அறைக்குள் சென்று தன்னிடம் இருந்த கத்தியால் ருக்கிசிங் கழுத்தில் வைத்து தன்னை காதலிக்க கோரி மீண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததோடு காதலிக்கவும் மறுத்துள்ளார். இதையடுத்து ருக்கி சிங்கின் கழுத்தை அறுத்ததோடு, அவரது கை மற்றும் காலில் வெட்டியுள்ளான்.

வலியால் சத்தமிட்ட ருக்கிசிங்கின் அலறல் கேட்டு அங்கு வந்த அவருடைய பெற்றோர் பிரேம் சிங்கை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து தூணில் கட்டிவைத்தனர். போலீசாரை வரவழைத்து பிரேம்சிங்கை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பிரேம் சிங்கை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ருக்கிசிங் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments