மதுபோதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை கைது செய்த போலீசார்

0 3104

மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வசித்து வந்த அண்ணாதுரையின் 28 வயது மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அவரை அண்ணாதுரை கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அரவிந்த் அண்ணாதுரையை சரமாரியாக அடித்து கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments