சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி பொதுமக்கள் புகார்

0 26904

ஈரோட்டில் சீட்டு நிறுவனம் நடத்திப் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டுத் தலைமறைவானவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரிப் பாதிக்கப்பட்டோர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்த வள்ளல் பாபு, பைவ் ஸ்டார் சோப்பு தயாரிப்பு நிறுவனம், சீட்டு நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார்.  சீட்டு முதிர்வடைந்த பணத்தைக் கேட்க பைவ் ஸ்டார் நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் அது பூட்டியிருந்ததையும், ஆவணங்கள் எரிக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சோப்பு ஆலை, வீடு ஆகியவற்றை மற்றவருக்கு கைமாற்றிவிட்டு தலைமறைவான வள்ளல் பாபு குறித்து, இருநூற்றுக்கு மேற்பட்டோர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments