தடுப்பூசி பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சரின் கையால் பாராட்டுச் சான்றிதழ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1722

தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு, குடியரசு தினத்தன்று முதலமைச்சரின் கையால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 30ம் தேதி 7வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, டெல்லியிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் டெல்லியில் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்த பின், சென்னை திரும்பியவர் அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments