குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்த கோவில் நிலங்களை மீட்க வேண்டும், என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0 2656

குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்தை நடத்தும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்தர், ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு 21 ஏக்கர் நிலம் அரசுக்குத்தான் சொந்தம் என்றும், விவசாயம் செய்வதற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், ஆனால் விவசாயம் செய்யாமல் வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து குயின்ஸ்லேண்ட்டை நிறுவனத்தை நடத்தும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments