கர்நாடக மாநிலம் உருவான நாள் அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட்டம்

0 1819

கர்நாடக மாநிலம் உருவான நாளையொட்டிப் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் அரசு சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை, பம்பாய் மாகாணங்களில் இருந்த பகுதிகள், மைசூர் ஆகியவற்றை இணைத்து 1956 நவம்பர் முதல் நாளில் மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது. 1973 முதல் அது கர்நாடகம் என மாற்றப்பட்டது.

இந்த நாளைக் கர்நாடக மாநிலம் உருவான நாளாக அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஹூப்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார்.

பெங்களூர் சட்டமன்றக் கட்டடத்தின் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுக் கன்னடமொழிப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.கன்னட மொழி மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments