கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, கைது செய்யப்பட்ட தனபாலுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

0 1783

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவரது அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் தனபாலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனு, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments