கட்டட விதிமீறல், ஒலி மாசு தொடர்பாக, விதி மீறும் மத வழிபாட்டுத் தலங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

0 2219

த வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிடும்படி தமிழகத் தலைமைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு தொப்பம்பாளையத்தில் உள்ள பெந்தக்கோஸ்த் மிஷன் சர்ச் என்ற அமைப்பு சார்பில் உரிய கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தேவாலயத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வட்டாட்சியரின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மக்களின் மத உணர்வுகளைக் காரணம்காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்புவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாகக் கருத வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments