தண்ணீர் குடிக்க முயன்று டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிய தெருநாய், உயிருடன் மீட்ட இளைஞர்கள்

0 2162

மதுரை திருநகர் பகுதியில் பிளாஸ்டிக் டப்பாவில் தலையை விட்டு சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய தெரு நாயை காப்பாற்றிய இளைஞர்களுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தண்ணீர் குடிக்க முயன்று  தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டியபடி ஒரு வாரத்திற்கு மெலாக ஆபத்தான நிலையில் சுற்றி திரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சீனிவாசன், வித்தோஷ் என்ற  இளைஞர்கள் உயிருக்கு போராடிய தெருநாயை வலைவீசி பிடித்து தலையில் இருந்த டப்பாவினை அகற்றினர். டப்பாவை அகற்றியதில் நாய் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஓடியது. அப்பகுதி மக்கள் காப்பாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments