பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான விவகாரம், 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

0 1645

சங்கராபுரத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியான விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி மாலை, மின் கசிவு காரணமாக பட்டாசுகள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறிய கோர விபத்தில் ஏழு பேர் பலியாகினர்.

30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இச்சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments