குரு பூஜை, தனியார் வாகனங்களில் பசும்பொன் செல்ல அனுமதி கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

0 1630

தேவர் குரு பூஜையை முன்னிட்டு, முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த தனியார் வாகனங்களில், பசும்பொன் செல்ல அனுமதிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், கோவில் விழாக்களை கொண்டாட, அதில் மக்கள் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவர் குருபூஜைக்கும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதற்கு அரசுத்தரப்பில், கூட்டம் கூடும் திருவிழாக்களில் மக்கள் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கினால், அது கொரோனா நோய்ப்பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும் என கூறிய நீதிபதிகள்,  மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments