சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை செய்ததாக கூறப்படும் வழக்கு... உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம், மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை

0 3039

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என அவரது உடலில் உள்ள திசுக்களை வைத்து சோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை அளித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட விசாரணைக்காக ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த உடற்கூராய்வு நிபுணரும் அரசு மருத்துவருமான செல்வகுமார் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகினார். சுமார் 3 மணி நேரம் உடற்கூராய்வு நிபுணர் செல்வகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments