மதுபோதையில் கீழே விழுந்து இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட இளைஞர்... சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தியதில் நண்பர்கள் 3 பேர் கைது

0 1869

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இளைஞர் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், முன்விரோதம் காரணமாக நண்பர்களே சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவினாசி கண்டிகையை சேர்ந்த அருண் 23ஆம் தேதி அதிகாலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தலையில் அடிப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக நினைத்து பெற்றோர் உடலை அடக்கம் செய்த நிலையில், அவர்களது நண்பர்கள் சிலர் அடித்து கொலை செய்ததாக செய்தி பரவியது.

இதனையடுத்து அருணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அருணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதில் அருண் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அருணுடன் சம்பவத்தன்று மது அருந்திய நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கல்லைப் போட்டு அருணை கொலை செய்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments