எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி அளித்துக் கொண்டிருந்த போதே, அதிமுகவில் இருந்து பஷீர் நீக்கம்

0 6732

திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி அளித்துக் கொண்டிருந்த போதே, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் பஷீர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வந்துள்ளது என்று செய்தியாளர்கள் கூறியதும், பஷீரின் முகம் மாறி குரல் தழுதழுத்தது.

அதன் பின்னர் தன்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை அதை பற்றி தான் கவலைப்படவில்லை என்று பஷீர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments