மாணவர்களுக்கு அழுகிப்போன முட்டைகள் வழங்கப்பட்டதாக புகார்: சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

0 2119

திருப்பூர் மாவட்டத்தில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை உலர் பொருட்களாக குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் வீதம் வழங்கப்பட்ட நிலையில், அவை அழுகிபோய், புழுக்கள் உருவான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், மாணவர்களுக்கு வேறு முட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments