மணப்பாறை அருகே புளியந்தோப்பில் 18 வயது இளைஞர் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு, போலீசார் விசாரணை

0 1826

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தந்தையிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துச் சென்ற 18 வயது இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் புளியந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

தாதகவுண்டம்பட்டியை சேர்ந்த அழகருக்கும், அவரது 18 வயது மகன் பாலசுப்ரமணியனுக்கும் நேற்றிரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு 9 மணியளவில் வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை வெளியே எடுத்து சென்ற பாலசுப்பிரமணியன், தாடை பகுதியில் சுடப்பட்ட நிலையில், அருகிலுள்ள புளியந்தோப்பில் சடலமாக கிடந்தார்.

அவரின் அருகே நாட்டு துப்பாக்கி உடைந்து கிடந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற மணப்பாறை போலீசார் சடலைத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments