சசிகலாவுக்கு அதிமுகவில் எந்த காலத்திலும் இடம் கிடையாது - ஜெயக்குமார்

0 4166

சிகலாவுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அதிமுகவில் எந்த காலத்திலும் இடம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில், அதிமுக பொன் விழா ஆண்டை ஒட்டி, கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, தினகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்றது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments