அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் அட்டகாசம்... அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு, அபராதம் செலுத்திய கல்லூரி மாணவர்கள்

0 7062

சென்னையில் அரசுப் பேருந்தில் பயணச் சீட்டு எடுக்காமல், அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்களை அதிகாரிகள் கீழே இறக்கிவிட்டு அபராதம் விதித்தனர்.

இராயப்பேட்டையில் உள்ள நியூ கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர், பேருந்து பயணத்தின்போது, பயணச் சீட்டு எடுக்காமல் சக பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் விதமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அறிந்த போக்குவரத்து அதிகாரிகள், பேருந்தை பாதியிலேயே வழிமறித்து விசாரித்த போது, சுமார் 25 பேரில் ஒருவரிடம் கூட பயணச் சீட்டு இல்லாதது தெரியவந்தது.

வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்த மாணவர்கள் பிராட்வே பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம் எனக் கூறப்படும் நிலையில், பழைய பஸ்பாசும் இல்லாமல், வேறு வழித்தடத்தில் பயணச்சீட்டும் எடுக்காமல் பயணித்ததால் அபராதம் செலுத்தும்படி அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து, அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, கையில் இருந்த 10ரூபாய், 20ரூபாய்களை வசூலித்து, ஒரு சிறு தொகையை மாணவர்கள் அபராதமாக செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments