பழைய வாகனங்களின் உதிரிப் பாகங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் தீவிபத்து... பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

0 1927

கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் பழைய வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டதில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் வாகனங்களின் அனைத்து உதிரிப் பாகங்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து விற்று வந்தனர்.

இந்நிலையில் கிடங்கின் அருகே பட்டாசு வெடித்தபோது அதன் தீப்பொறி பட்டு வாகன உதிரிப் பாகங்களில் தீப்பிடித்துள்ளது. தீ மளமளவெனக் கிடங்கு முழுவதும் பரவியதால் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது.

தீப்பிடித்ததை அறிந்ததும் அங்கிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments