ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரம்... துப்பாக்கி குண்டுகளை சல்லடை போட்டு தேடும் போலீசார்

0 2918

தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில், ரவுடியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இல்லாததால், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் அதனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 15-ந் தேதி கூட்டம்புளியைச் சேர்ந்த ரவுடி துரைமுருகனை முள்ளக்காடு உப்பள பகுதியில் பதுங்கியிருந்த போது, போலீசார் கைது செய்ய முயன்றனர். போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றதால், அவனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனையில் ரவுடியின் உடலில் குண்டுகள் இல்லாததால், சம்பவம் நடந்த இடத்தில் அதனை போலீசார் தேடி வருகின்றனர். உடலை துளைத்து குண்டுகள் வெளியே வந்திருக்கக் கூடும் என்ற அடிப்படையில் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையிலான போலீசார், சல்லடை போட்டு மண்ணை சலித்தும், காந்தங்களை மண்ணில் உருட்டியும் துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments