சென்னை IIT -ல் அடைத்து வைக்கப்பட்ட நாய்கள் இறந்த விவகாரம்... IIT மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

0 2032

சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தெருநாய்கள் உயிரிழந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐஐடி வளாகத்தில் ஒரே இடத்தில் நாய்களை அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் 186 நாய்களை ஐஐடி வளாகத்திற்குள் ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தது உறுதியானது.

இந்த வழக்கில் ஆஜராகி விளக்கமளித்த ஐஐடி பதிவாளர், வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்களில் 45 நாய்கள்  உயிரிழந்துவிட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

எனவே ஐஐடி நிர்வாகம் மீது மிருக வதைத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெரு நாய்கள் பராமரிப்பு குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து "சிட்டிசன்ஸ் ஃபார் அனிமல்'ஸ் ரைட்ஸ்" என்ற அமைப்பு சென்னை ஐஐடி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments