முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கலாம் என மத்தியக் கண்காணிப்புக் குழு தெரிவித்ததற்கு கேரளா எதிர்ப்பு

0 2184

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கலாம் என மத்தியக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

126 ஆண்டுப் பழைமை வாய்ந்த அணை நிலநடுக்கத்தாலும், திடீரென அதிக மழை பொழிந்தாலும் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் பெரியாறு வடிநிலப் பகுதியில் 30 இலட்சம் பேரின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அனுமதித்த 142 அடி என்பதற்கு மாறாக 140 அடிக்கும் குறைவாகவே நீரைத் தேக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு மேல் உயர்ந்தால் நீரின் அழுத்தத்தை அணை தாங்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் மத்தியக் கண்காணிப்புக் குழுவும், தமிழ்நாடு அரசும் நிலநடுக்கம், கட்டமைப்பு, நீரியல் என அனைத்து வகையிலும் அணை பாதுகாப்பாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments