நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை - உச்சநீதிமன்றம்!

0 2323

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் முடிவுகளை வெளியிட, தேசிய தேர்வு முகமைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நீட் தேர்வில் தவறான சீரியல் எண் கொண்ட வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டதாக  மும்பை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மாணவர்கள் வழக்கு தொடுத்தனர்.

அந்த இரு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம், சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகளை நிறுத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு மாணவர்களுக்காக தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments