தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0 3046

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழையும், இதர கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை முதல் 3 நாட்களுக்கும் நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யகூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 17 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments