ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் தலைதெறிக்க ஓடிய கொள்ளையன்!

0 2251

திருப்பூர் மாவட்டம் ஏரிப்பாளையம் அருகே எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

உடுமலைப்பேட்டை - திருப்பூர் செல்லும் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். அமைந்துள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த கொள்ளையன், ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து கொண்டு இரும்புக் கம்பியை கொண்டு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றான்.

பணம் இருக்கும் பகுதியை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால், கொள்ளை முயற்சியை பாதியிலேயே கைவிட்ட கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments