சசிகலா விவகாரம்: ஓ.பி.எஸ். கூறிய கருத்தில் தவறு இல்லை - செல்லூர் ராஜு

0 4283

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை என, சசிகலா குறித்த கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சசிகலா குறித்த விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சை நிலவுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியதில் தவறேதும் இல்லை எனவும், சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சையே கிடையாது, பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments