காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி சுட்டுக்கொலை

0 2481

காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருவரைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியை பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவரைப் அண்மையில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்குப் பொறுப்பேற்ற பயங்கரவாதி குல்சரை அக்டோபர் இருபதாம் நாள் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் பாரமுல்லாவின் சேர்தாரி என்னுமிடத்தில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜாவேத் அகமது வானி என்கிற பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்றனர். இவன் பீகார் தொழிலாளர்களைச் சுட்டுக்கொல்வதில் குல்சருக்கு உதவியாக இருந்தவன் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments