வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, தீரத்துடன் எதிர்கொண்ட வளர்ப்பு நாய்

0 11888

கடலூர் அருகே எஜமானியர் வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, வளர்ப்பு நாய் ஒன்று தீரத்துடன் எதிர்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்த பிரியா, தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இன்று காலை பிரியா வெளியில் சென்றுவிட, வெகு நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, வீட்டு காம்பவுண்டுக்குள் படமெடுத்து நின்றிருந்த நல்ல பாம்பை கண்டு நாய் குரைத்தது தெரியவந்தது.

நாய் குரைத்ததை வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருந்த நல்ல பாம்பு ஒரு கட்டத்தில் கடுப்பாகி, நாயை கொத்த முற்பட்டது. இருப்பினும், அசராத அந்த வளர்ப்பு நாய் சுமார் அரை மணி நேரமாக பாம்பு இருந்த இடத்தில் இருந்து அதை நகரவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது.

இதனையடுத்து, பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவரான செல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாம்பு பிடிக்கப்பட்டு, காப்புக்காட்டில் விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments