கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

0 1621

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்டு விளையாடி வந்த 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினருக்கு கிருஷ்ணா நகர் பகுதியில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு வீடு ஒன்றில் சூதாட்ட செயலில் ஈடுபட்டு வந்த 9பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 30 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்,400  சிம் கார்டுகள், கார், ராயல் என்ஃபீல்டு பைக், கணினி சாதனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யார் சூதாட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments