தேனி கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு!

0 1348

தேனி வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் கடத்தப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோயிலில் நுழைந்த மர்மகும்பல் 4 ஐம்பொன் சிலைகள், வேதவியாசர், மாணிக்கவாசகர், தாயுமானவர், நந்திகேஸ்வரர் சிலைகள் மற்றும் பலிபீடம், உண்டியல் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளது.

தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஸ்ரீதர் என்பவனை கைது செய்தனர். அவனிடமிருந்து 7 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் என்பவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments