அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல்... 6 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

0 1859

அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் காற்றினால் அங்கு 6 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பகுதியில் வீசிய புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் 4 லட்சத்து 66 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நிலைமை மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் தேவையின்றி பொதுமக்கள் வெளியில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments