இனம், மதம் தாண்டி மக்களை இணைப்பது விளையாட்டு மட்டுமே... மன்னிப்புக் கோரிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் - வக்கார் யூனுஸ்

0 3549

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தான் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் நமாஸ் செய்தது தொடர்பாக வக்கார் யூனுஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் விமர்சித்திருந்த நிலையில், போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற உற்சாகத்தில் அவ்வாறு பேசியதாக வக்கார் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இனம், நிறம், மதம் தாண்டி மக்களை இணைப்பது விளையாட்டு மட்டுமே என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments