அரசுப் பேருந்தில் ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - அச்சமடைந்த பயணிகள்

0 3320

மதுரையில் அரசுப் பேருந்தின் மேல் ஏறி நின்று ஆட்டம் போட்டு அராஜகம் செய்த இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், திருப்புவனம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை மறித்து அதன் மேற்கூரை மீது ஏறி நின்று கோஷம் எழுப்பியவாறு ஆட்டம் போட்டனர்.

இளைஞர்களின் இந்த செயலால் பேருந்திலிருந்த பயணிகளும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து போலீசார் வந்தபிறகுதான் இளைஞர்கள் பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments