நத்தம் அருகே இரண்டு, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

0 2519

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள குட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி உட்பட 3 பேர் படுகாயமடைந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் உடையநாதபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது மனைவி மணிமேகலையுடன் உலுப்பகுடியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது குட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே அவரது இருசக்கர வாகனமும், கோபால்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் சாலையின் வலது பக்கமாக ஒட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரும் 108 ஆம்புலன்சில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments