பிறந்த நாளை இறந்த நாளாக்கிய நண்பர்..! விளையாட்டு வினையான பரிதாபம்..!

0 4515

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் மது அருந்திய நண்பர்கள் இருவரிடையே விளையாட்டு வினையாகி ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்ததில் மற்றொருவர் உயிரிழந்தார்.

நவ்வலடியைச் சேர்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி ரமேஷ் தனது பிறந்த நாளையொட்டித் திசையன்விளையில் தனது நண்பரான முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து காலை முதலே மது அருந்தியுள்ளார்.

மாலையில் கடைத்தெருவில் நின்றுகொண்டிருந்த போது ரமேஷ் விளையாட்டாக முருகானந்தத்தை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமான முருகானந்தம் வீட்டில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து ரமேசை அடித்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments